சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Sunday, August 14, 2005

கதை எண் 29 - பேராசை பெரும் நஷ்டம்

Image hosted by Photobucket.com


சிறுநாவலூர் என்னும் கிராமத்தில் சுப்பன் என்ற விவ சாயி வாழ்ந்து வந்தான். கிராமத்து விவசாயிகள் எல்லோரும் நிலத்தில் பயிர் வைக்கும்போது தான் சுப்பனும் பயிர் வைப்பான்.

ஆனால் மற்ற விவ சாயிகளின் நிலத்தில் விளைவதை விட அதிக விளைச்சல் சுப்பனின் நிலத்தில் ஏற்பட்டது. உணவு தானியங்களை விற்பனை செய்தபோது அவனுக்கு அதிக வருமானம் கிடைத்தது. மற்ற விவசாயிகள் எல்லோரும் சுப்பனைக் கண்டு மனம் புழுங்கினர். அவன் போடுகின்ற உரங்களைத்தானே நாமும் போடுகிறோம். நமக்கு மட்டும் ஏன் அவன் அளவு விளைச்சல் இல்லை என வாய் விட்டே பேசிக் கொண்டனர்.

சில வருடங்களிலேயே பெரிய பணக்காரனாகி விட்டான் சுப்பன். ஆனால் அவனுக்கு சந்தேகம்தான் தீரவில்லை. தன் நிலத்தில் மட்டும் எப்படி இவ்வளவு விளைச்சல் என்று யோசனை செய்தான். இந்த ரகசியத்தை எப்படியும் கண்டுபிடித்து விட வேண் டும் என நினைத்தான். ஒரு நாள் நடுஇரவில் நிலத்தைப் பார்க்க கிளம்பி விட்டான். நிலத்திற்கு அருகில் உள்ள புளிய மரத்தடியில் உட் கார்ந்து கொண்டான்.

விடியற்காலை நேரம் புயல் அடிப்பது போன்ற சத்தம் வானத்திலே கண் ணைக் கூசும் ஒளி. அண் ணாந்து பார்த்தான்.

இரண்டு பூதங்கள் ஆகாய மார்க்கமாக அவன் நிலத்தை நோக்கி கீழிறங் கின. அதன் முதுகுகளில் பெரிய பெரிய தங்க அண் டாக்களில் தண்ணீர்.

அந்தத் தண்ணீரை அவைகள் அவன் நிலத்தில் ஊற்றின.

அடடே இந்த தண் ணீரின் மகிமைதான் நமது நிலத்தின் விளைச்சலுக்குக் காரணம் என புரிந்து கொண்டான் சுப்பன்.

நேரே பூதங்களின் எதிரே போய் நின்றான். ``ஏ பூதங்களே... நீங்கள் யார்...? ஏன் என் நிலத்திற்கு தண் ணீர் பாய்ச்சுகிறீர்கள்...?'' என்றான் சுப்பன்.

பூதங்கள் இரண்டும், ``ஐயா நாங்கள் தேவேந்தி ரன் சபையின் காவலாளி கள். ஒரு நாள் நாங்கள் அவர் வருவதைக் கவனிக் காமல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டோம். அதனால் கோபம் அடைந்த தேவேந்திரன், ``நீங்கள் பூமியிலே பூதங்களாக திரிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் உட்கார நேர மின்றி கங்கை தண்ணீரை சுமந்து வந்து யாருடைய நிலத்திலாவது பாய்ச்சி வேலை செய்து வரவேண் டும்.

அவ்வாறு பன்னி ரெண்டு ஆண்டுகள் கழித்து சாப விமோசனம் பெற்று மீண்டும் தேவ லோகம் வருக என சாபம் கொடுத்து விட்டார். அன்று முதல் நாங்கள் உட்கார நேரமின்றி கங்கை நீரைக் கொண்டு வந்து உனது நிலத்தில் பாய்ச்சுகிறோம். அதனால்தான் உனக்கு அமோக விளைச்சல் கிடைக்கிறது. இப்போது நாங்கள் கங்கை நதி செல்ல கிளம்பினால் மாலையாகும். அங்கிருந்து தண்ணீர் எடுத்து வர அதிகாலை ஆகிவிடுகிறது. எங்க ளுக்கு உட்கார நேரமே இல்லை'' என்று இரண்டு பூதமும் அழுதன.

``ஆமாம் உங்களுக்கு சாப விமோசனம் பெற இன்னும் எவ்வளவு நாள் உள்ளது'' என்றான் சுப்பன்.

``இன்னும் ஆறு மாதங் கள் இருக்கின்றன'' என்றன பூதங்கள்.

ஐயையோ பூதங்கள் போய் விட்டால் கங்கை தண்ணீர் கிடைக்காதே. விளைச்சல் குறைந்து விடுமே. நமக்கு பணம் சேராதே. இந்த பூதங்களை இங்கேயே தங்கி நமக்கு வேலை செய்ய அவைகளை அடிமையாக்க திட்டம் போட் டான். மந்திரவாதி ஒருவனி டம் சென்று யோசனை கேட்டான்.

``அந்த பூதங்களை நீ எப்படியாவது ஒரு பாட்டிலில் அடைத்து விடு. பிறகு அவைகள் உனக்கே வேலை செய்ய வேண்டு மென சத்தியம் வாங்கிக் கொண்டு வெளியே விடு. பூதங்கள் சத்தியம் தவறாது'' என்றான், மந்திரவாதி.

மறுநாள் இரவு நிலத் திற்குச் சென்றான் சுப்பன். பூதங்கள் இரண்டும் தண் ணீர் பாய்ச்சிக் கொண்டி ருந்தன. ``ஏய் பூதங்களே... உங்களால் எவ்வளவு பெரி தாக வளர முடியும்?'' என்றான்.

``நாங்கள் ஆகாயம் வரை வளர முடியும்'' என் றன பூதங்கள்.

``சரி வளருங்கள் பார்க் கலாம்'' என்றான் சுப்பன். பூதங்கள் ஆகாயம் வரை வளர்ந்தன.

``சரி இப்போது எவ் வளவு சிறியதாக மாற முடியும்'' என்றான் சுப்பன்.

பூதங்கள் இரண்டும் கட்டெறும்பு அளவிற்கு உருமாறின.

அடுத்த நிமிடம் அவை களை தான் வைத்திருந்த பாட்டிலில் போட்டு மூடி விட்டான்.

``ஐயையோ இவன் ஏதோ திட்டம் போட்டு இப் படி செய்து விட்டானே...! நாம யார் நிலத்துக்கு வேண்டுமானாலும் கங்கை நீரை பாய்ச்சி இருக்கலாம். ஆனா நாம தொடர்ந்து சுப்பன் நிலத்துக்கு தண் ணீர் ஊற்றியும் நன்றியில்ல பாத்தியா...? இனி இவனுக் காக நாம் வேலை செய்யக் கூடாது. எப்படி இவனிடம் இருந்து தப்பிக்கலாம்'' என இரண்டு பூதங்களும் பேசிக் கொண்டன.

``சுப்பா எங்களை வெளி யே விடு. இல்லாவிட் டால் உன் நிலத்துக்கு கங்கை நீர் கிடைக்காது. விளைச்சல் குறைந்து விடும். பழையபடி ஏழையாகி விடுவாய்'' என் றன பூதங்கள்.

``நீங்கள் என்னிடமே வேலை செய்வதாக சத்தி யம் செய்து கொடுத்தால் வெளியே விடுகிறேன்'' என்றான் சுப்பன்.

``ஏ முட்டாள் சுப்பா... நாங்களே சாபம் பெற்று சுய உருவம் இழந்து பூதமாக இருப்பவர்கள். நாங்கள் செய்யும் சத்தியம் எங்களை கட்டுப்படுத்தாது. எனவே நாங்கள் தேவலோகம் சென்று சுயஉருவம் பெற்று வருகிறோம். அதன் பிறகு உனக்கு சத்தியம் செய்து தருகிறோம்'' என்றன.

``சரி சரி...'' என சுப்பன் பாட்டிலைத் திறந்து விட இரண்டு பூதங்களும் தப்பித் தால் போதுமென ஆகாய மார்க்கமாக பறந்தன.

ஒரு வாரம் ஓடிற்று. பூதங்கள் வரவில்லை. வய லும் கங்கை நீரின்றி வளம் இழந்து காணப் பட்டது.

சுப்பனுக்கு அதிர்ச்சி. பூதம் பொய் சொல்லுமா? சொல்லாதே. பிறகு எங்கே தவறு நடந்தது?

யோசித்தவன் அன்று இரவு தனது வயலுக்கு அரு கில் இருந்த புளிய மரத்தில் ஏறி கண் காணிக் கலா னான்.

நடு இரவு தாண்டிய நேரத்தில் 2 பூதங்களும் அந்த வழியாக பறந்து வந்தன. சுப்பனின் வயலைத் தாண்டிச் சென்று அடுத் தடுத்த வயல்களில் கங்கை நீரை நிரப்பின.

சுப்பன் அதிர்ந் தான். ஓடிப் போய் பூதங்கள் முன்பாக நின்றான். ``என்னை ஏமாற்றி விட்டீர்கள். அதுமட்டுமல்லாமல் என் நிலத்தை தவிர்த்து வேறு வயலில் தண்ணீர் விடு கிறீர்கள். இது அநீதி'' என்று கத்த லானான்.

Image hosted by Photobucket.com

அப்போது ஒரு பூதம் பேசிற்று: ``மானிடப் பதரே! நீ கேட்காம லேயே உனக்கு அதிர்ஷ்டம் வந் தது. அதன் மூலம் பலன் பெற்றாய். அதிர்ஷ்டத்துக்கான காரணம் தெரிந்தும் உனக்குள் பேராசை தலைதூக்கிற்று. அதிர்ஷ்டம் எப்போதும் உனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று பேராசைப்பட்டாய். கிடைத்த அதிர்ஷ்டத் தில் வாழ்வை பலப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அதிர்ஷ்டத்தையே உனக்கு அடிமைப்படுத்த எண்ணக் கூடாது. அதிலும் உன் அணுகுமுறை எங்களை வேதனைப்படுத்தி விட்டது. நீ எத்தனாக இருந்தால் நாங்கள் எத்த னுக்கு எத்தனாக இருப்போம். இனி எஞ்சிய ஆறு மாதங்களும் யார் நிலத்துக் கோ தண்ணீர் விட்டாலும் உன் வயல் பக்கமே எட்டிப் பார்க்கமாட்டோம். நீ எங்களை ஏமாற்ற எண்ணிய வகை யிலேயே நாங்களும் உன்னை ஏமாற்றி விட்டோம். இப்போதாவது உனக்கு புரிகிறதா...?''

சுப்பனுக்கு பேச வார்த்தையில்லை. பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழி அவனுக்கும் தெரியும் தானே...!

Monday, August 08, 2005

கதை எண் 28 - கேள்விக்கதை - தியாகம்

Image hosted by Photobucket.com
சதுரங்க பட்டணத்தை சுந்தரபாண்டி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு கதம்பா என்னும் அழகிய பெண் இருந்தாள்.

மந்திரி மகாதேவனுக்கு நிலவழகன் என்னும் மகன் இருந்தான். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள், இருவரும் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினர். பெரியவர்கள் ஆனதும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஒருநாள் திடிரென்று பக்கத்து நாட்டு அரசன் பகை கொண்டு, இவர்கள் நாட்டை பிடித்து விட்டான், அவனிடம் இருந்து தம்பி ஓடிய நிலவழகன், கர்பமுற்ற கதம்பா இருவரும் காட்டுக்குள் சென்று

கால்போன வழியே நடந்து சென்றனர். பொழுது விடியும் நேரத்தில் அடுத்த ஊரை அடைந்தனர். அரசகுமாரிக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டது. அவளை ஒரு சத்திரத்தில் தங்க வைத்து விட்டு மருத்துவச்சியை அழைத்து வர ஊருக்குச் சென்றான்.

வெய்யிலும் கடுமையாகக் காய்ந்து கொண்டிருந்தது. புதிய ஊர் ஆனதால் எங்கே மருத்துவச்சி இருக்கிறாள் என்று தேடுவதிலேயே உச்சி வேளையாகி விட்டது. அவன் சோர்வடைந்து ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஓய்வெடுத்தான்.

அந்த வீட்டுப் பெண் மந்திரா ஒரு மந்திரக்காரி. தற்செயலாக வாயிலுக்கு வந்து பார்த்தாள். நிலவழகன் முகத்தைப் பார்த்ததும் மயங்கினாள். யார் என்று அவனை விசாரித்தாள். தான் வந்த நோக்கத்தைச் சொன்னான்.

""நல்லது! மருத்துவச்சிக்கு நான் ஏற்பாடு செய்து தருகிறேன். கவலையை விடுங்கள். நீங்கள் உள்ளே வந்து ஓய்வெடுங்கள்,'' என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் மந்திரக்காரி மந்திரா.

மனிதனை விலங்காகவோ விலங்கைப் பறவையாகவோ மனிதனாகவோ உருமாற்ற அறிந்தவள். அவள் நிலவழகனை தன்னுடனே வைத்துக் கொள்ளத் தீர்மானித்தாள். அவனை எருமைக்கடாவாக உருமாற்றி ஒரு கம்பத்தில் கட்டினாள்.

சத்திரத்தில் காதலனை எதிர்பார்த்திருந்த கதம்பாவுக்கு பிரசவ வேதனை அதிகரித்துக் கத்தினாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து அவளுக்கு பிரசவம் பார்த்தனர். அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் தவித்தாள்.

மருத்துவச்சியை அழைத்து வருவதாகச் சொல்லிச் சென்ற நிலவழகனைத் தேடிப் புறப்பட்டாள். எங்கும் அவன் அகப்படாததால் அந்த நாட்டின் மன்னனிடம் சென்று முறையிட்டாள்.

அரசன், மந்திரியிடம் நிலவழகனைத்கண்டு பிடித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தான். மந்திரி தன் ஆட்களுடன் ஊர் முழுவதும் தேடினான். பல நாட்கள் தேடியும் நிலவழகன் கிடைக்கவில்லை.

அரசனது முயற்சியும் பலன் தரவில்லை என்றதும், ""மன்னா இனி நான் கணவன் இல்லாமல் உயிர் வாழ விரும்பவில்லை. தயவு செய்த தீ வளர்த்து கொடுங்கள். அதில் பாய்ந்து நானும், குழந்தையும் உயிரை மாய்த்துக் கொள்கிறோம்,'' என்றாள்.

மன்னன் வாழ்வதற்கான உதவி செய்வதாகச் சொல்லியும் அவள் பிடிவாதமாக இருந்தாள். வேறு வழியின்றி ஊரின் மத்தியிலுள்ள மைதானத்தில் தீ வளர்த்துக் கொடுக்கக் கட்டளையிட்டான் மன்னன்.

யாரோ ஒரு பெண் தன் குழந்தையுடன் தீயில் பாய இருக்கிறாள் என்னும் செய்தி ஊர் முழுவதும் பரவியது. மந்திரக்காரியும் அதை அறிந்தாள். அவள் தான் விரும்பிய சமயம் நிலவழகனை மனிதனாக உருமாற்றினாள்.

மற்ற நேரங்களில் எருமைக்கடாவாக உருமாற்றிக் கட்டி வைத்தாள். அன்று தாயும் குழந்தையும் தீயில் பாய இருக்கும் காட்சியை காண நிலவழகனை மனிதனாக்கி அழைத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தாள்.

கொழுந்து விட்டு எரியும் தீயில் குழந்தையுடன் பாய இருந்த இளவரசியைக் கண்டதும் நிலவழகனுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் வந்தன. அவன் பெரும் சத்தமிட்டுக் கொண்டே கதம்பாவை தடுக்க ஓடிவந்தான். அதற்குள் அவள் தன் குழந்தையுடன் தீயில் பாய்ந்து விட்டாள்.

தன் தவறால் தானே தன் மனைவி குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்டாள் என்று கருதி, அவனும் தீயில் பாய்ந்தான்.

இக்காட்சியைக் கண்ட மந்திரா தன் ஆசையின் காரணமாகத் தான் அப்பெண் தீயில் பாய நேர்ந்தது என்று வருந்தி அவளும் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டதைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரியும் தீயில் பாய்ந்து உயிரை விட்டான்.

நடந்த இச்செய்தியை அறிந்த அரசன், காளி கோயிலுக்குச் சென்றான். அம்பிகையின் முன் கரங்குவித்து, ""நீதி தவறாது ஆட்சி செய்யும் என் நகரத்தில் அநியாயமாக ஐந்து உயிர்கள் பலியாகிவிட்டன. தயவு செய்து அவர்களை உயிர்ப்பித்துக் கொடு. இல்லாவிட்டால் நானும் உன் காலடியில் உயிரை விடுவேன்,'' என்று உடைவாளை எடுத்துத் தன் தலையைத் துண்டிக்க ஓங்கினான்.

மறுகணம் தேவி தோன்றி, ""மன்னா, குடிமக்களிடம் உனக்குள்ள நல்ல எண்ணத்தைப் பாராட்டுகிறேன். கவலைப்படாதே. அவர்கள் உயிர் பிழைத்து எழுவர், அத்துடன் உன்னுடைய உதவியால் நிலவழகன் தன் எதிரியுடன் போராடி, தன் நாட்டை மீட்டு நல்லாட்சி செய்வான்'' என்று கூறி மறைந்தார். அவ்விதமே ஐவரும் உயிர் பெற்று எழுந்தனர்.

இப்போ உங்களிடம் ஒரு கேள்வி? தீயில் தன் உயிரைப் பலிகொடுத்த ஐவருள் யார் சிறந்தவர்?'' என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

Sunday, August 07, 2005

கதை எண் 27 - எத்தனுக்கு எத்தன்

Image hosted by Photobucket.com


பொன்னியூர் என்ற ஊரில் ஜனா, சுருதி என்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். ஜனா திறமையாகச் சம்பாதித்துக் கொண்டு வருவான். சுருதி அதை வாங்கி நிம்மதியாகச் சாப்பிடுவான்.

உள்ளூரில் பஞ்சம் ஏற்பட்டது. கட்டுபடியாகவில்லை. ஆதலால் வெளியூர் சென்று வியாபாரம் செய்து பிழைக்க இருவரும் முடிவு செய்தனர்.

இருவரும் குதிரையில் ஏறிக் கொண்டு பல ஊர்களையும் கடந்து ஏமலுõர் என்ற ஊரை அடைந்தனர். ஊர் எல்லையில் உள்ள சத்திரம் ஒன்றில் தங்கினர். ஜனா சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டான்.


""சுருதி நான் இங்கே ஓய்வெடுக்கிறேன். நீ ஊருக்குள் சென்று வியாபாரம் செய்து விட்டு வா!'' என்று கூறி நண்பனை அனுப்பி வைத்தான்.

சுருதி மிகவும் வெகுளி. யார் எதைச் சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவான். இக்கட்டில் மாட்டிக் கொண்டு விழிப்பான். இருந்தாலும் அவனிடம்தான் காசு இருந்தது.

ஆயிரம் பொற்காசுகளை குதிரையின் சேணத்தில் மறைத்துக் கொண்டு குதிரையில் ஏறி நகரை நோக்கிச் சென்றான்.

ஊருக்குள் சென்றதும் வீதியில் எதிரே ஒருவன் வந்தான்.

""இந்தக் குதிரை விலைக்குக் கிடைக்குமா?'' என்று கேட்டான்.

""விலைக்குத் தரத் தயார். விலை மிக அதிகம். உன்னால் கொடுக்க முடியுமா? நீ என்ன தொழில் செய்கிறாய்?'' என்று வினவினான் சுருதி.

""என் பெயர் வில்லன். ஆடுகளை வெட்டி இறைச்சி விற்கும் கசாப்புக்கடை நடத்துகிறேன். விலையைக் கூறு?'' என்றான் வில்லன்.

""இதன் விலை ஐந்நுõறு பொற்காசுகள்!''

""உயர்தரமான அரேபியக் குதிரைகளே இருநுõறு பொற்காசுகளுக்குக் கிடைக்கின்றன. உன் குதிரை பெரிய அதிசயக் குதிரையா? சரி பரவாயில்லை. இதோ நீ கேட்ட ஐந்நுõறு பொற்காசுகள். குதிரையைக் கொடு,'' என்றான். ஐந்நுõறு பொற்காசுகளை எண்ணியும் கொடுத்தான்.

பொற்காசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுருதி குதிரையை விட்டு இறங்கினான். பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டான். பிறகு குதிரையின் சேணத்தில் தான் வைத்திருந்த பணப்பையை எடுக்கச் சென்றான்.

""இந்தக் குதிரையைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். இப்போது குதிரை எனக்குச் சொந்தம். குதிரையோடு உள்ள பொருட்கள் யாவும் எனக்கே சொந்தம்,'' என்று கூறிவிட்டு குதிரைமேல் ஏறிச் சென்றுவிட்டான்.

ஆயிரம் பொற்காசுகளை இழந்த சுருதி மிகுந்த ஏமாற்றத்துடன் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தான். நடந்தவற்றை நண்பனிடம் கூறினான். அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுடைய சோகக் கதையைக் கேட்ட ஜனா ஏளனமாகச் சிரித்தான்.

""இந்த ஊரினர் பயங்கர எத்தர்களாக இருப்பர் போலும். இருக்கட்டும். உன்னிடம் குதிரையை வாங்கியவனின் பெயர் என்ன?'' என்று கேட்டான் ஜனா.

""கசாப்புக்கடை வில்லன்!'' என்றான்.

உடனே நண்பனிடம் இருபத்தி ஐந்து பொற்காசுகளை வாங்கிக் கொண்டு வில்லனின் கசாப்புக் கடையின் முன்பாகப் போய் நின்றான். கடையில் நான்கைந்து ஆட்டுத் தலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைத் திண்டில் வில்லனின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

""ஒரு தலையின் விலை என்ன?'' என்று கேட்டான்.

""ஒரு தலை ஒரு பொற்காசு.''

""எத்தனை தலைகள் வேண்டுமானாலும் கிடைக்குமா?''

""ஆகா... தாராளமாகக் கிடைக்கும்!''

""இதோ இருபத்தி ஐந்து பொற்காசுகள். இருபத்தி ஐந்து தலைகள் கொடு!''

""இப்போது இங்கே இருக்கும் தலைகளை எடுத்துப் போ. மீதியை நீ இருக்குமிடத்தைச் சொல். அங்கே அனுப்பி வைக்கிறேன்.''

""அதெல்லாம் முடியாது. இங்கு தொங்கும் தலைகளுடன் கடையில் உள்ள உன் குழந்தைகளின் தலையையும் வெட்டிக் கொடுக்க வேண்டும். தலைகள் என்றுதான் பேசினோம். ஆட்டுத்தலைகள் என்று கூறவே இல்லை. எனக்குக் குழந்தைகளின் தலைகளையும் கொடுக்க வேண்டும்!'' என்றான்.

கசாப்புக்கடைக்காரன் அதிர்ச்சியில் நடுங்கினான். "இவன் நம்மைவிடக் கில்லாடியாக இருக்கிறானே! எக்கச்சக்கமாக வாக்குக் கொடுத்து வசமாக மாட்டிக் கொண்டோமே!' என்று மிகவும் பதறிப் போனான்.

""ஐயா! ஏதோ முட்டாள்தனமாக வாக்குக் கொடுத்து விட்டேன். மன்னித்துக் கொள்!'' என்று கெஞ்சினான்.

""சேச்சே... நீ கூறுவது எதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலில் தலைகளைக் கொண்டு வா!'' என்று கடுமையாகக் கூறினான் ஜனா.

அப்போதுதான் தான் காலையில் குதிரையை ஏமாற்றி வாங்கியது நினைவிற்கு வந்தது. ஏமாந்தவனின் நண்பன் இவன் என்பதை புரிந்து கொண்டான். இவனிடம் தனது ஜம்பம் பலிக்காது என்பதைப் புரிந்து கொண்டான்.

""ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். வெளியூர்க்காரர் தானே என்று நினைத்து குதிரைக்காரரான உமது நண்பரை ஏமாற்றிவிட்டேன். குதிரையையும் சேணத்தில் இருந்த ஆயிரம் பொற்காசுகளையும் தந்து விடுகிறேன். என்னை இத்துடன் விட்டு விடுங்கள்,'' என்று மன்றாடினான்.

சரியெனச் சம்மதித்து குதிரை மற்றும் பணப்பையுடன் ஜனா சத்திரத்திற்குத் திரும்பினான். நண்பனின் ஆற்றலை எண்ணி வியந்தான், தானும் ஜனாவைப் போல் புத்திச்சாலியாக மாற தீர்மானித்தான் சுருதி.

Wednesday, August 03, 2005

கதை எண் 26 - மகாத்மா காந்தியின் வாழ்க்கையில்

Image hosted by Photobucket.com


காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் ஒரு வாலிபன் அங்கு தங்கி பணிவிடைகள் செய்வதற்காக வந்து சேர்ந்தான்.

அந்த வாலிபன் மிகவும் நல்லவன்; ஒழுக்கமானவன். ஆசிரமத்தில் இருந்த அத்தனை குழந்தைகளின் மீதும் அன்பு கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்த வாலிபன் ஒரு ஆசிரமச் சிறுமியுடன் சபர்மதி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது கையில், ஒரு எலுமிச்சம்பழம் இருந்தது. அந்த எலுமிச்சம் பழத்தை அந்தச் சிறுமியிடம் துõக்கிப் போட்டு அவள் பிடிப்பதற்குள் அவன் அதைப் பிடித்து, அவள் கையில் எலுமிச்சம்பழம் சிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுமியும் சளைக்காமல் அந்த எலுமிச்சம் பழத்தைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இளைஞன் எலுமிச்சம் பழத்தை நதியில் வீசி எறிவது போல் பாவனை செய்து, எலுமிச்சம் பழத்தை தனது கால்சட்டைப் பையிற்குள் போட்டுக் கொண்டான்.

எலுமிச்சம் பழத்தை காணாத சிறுமி விழித்தாள்.

""எங்கே பழம்?'' என்று கேட்டாள்.

""நதிக்குள் எறிந்துவிடடேன்!'' என்றான் இளைஞன்.

""நான் போய் தேடி எடுத்து வரட்டுமா?'' என்று கேட்டாள் சிறுமி.

""அது வீண் வேலை. பழம் கிடைக்காது!'' என்றான் வாலிபன்.

சிறுமியும் அதை நம்பிவிட்டாள்.

""சரி! விளையாடியது போதும். பாபுஜி தேடுவார். ஆசிரமத்திற்கு செல்லுவோம்!'' என்று சொன்னாள் சிறுமி.

இளைஞனும், சிறுமியும் ஆசிரமத்தை நோக்கி சென்றனர். சட்டென்று அந்த வாலிபன் தனது கால்சட்டைப் பையிற்குள்ளிருந்து கைக்குட்டையை எடுத்தான். அப்போது அந்தப் பையிற்குள் ஒளித்து வைத்திருந்த எலுமிச்சம்பழம் கீழே விழுந்தது.

அதை அந்தச் சிறுமி பார்த்துவிட்டாள். அவளுக்கு கோபம் வந்தது.

""ஏய்! பழம் ஆற்றில் விழுந்துவிட்டது என்று பொய்தானே சொன்னாய். இரு... இரு... பாபுஜியிடம் சொல்லுகிறேன்!'' என்ற சிறுமி, ஆசிரமத்திற்கு சென்று காந்திஜியிடம் அந்த விஷயத்தை கூறிவிட்டாள்.

காந்திஜி பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும் அந்த வாலிபனை அழைத்து, ""நதிக்கரையில் என்ன நடந்தது?'' என்று விசாரித்தார்.

வாலிபன் நடந்ததைக் கூறினான்.

""பார் தம்பி! எலுமிச்சம் பழம் நதிக்குள் விழுந்துவிட்டது என்று பொய்தான் சொல்லியிருக்கிறாய். குழந்தைகளுடன் விளையாடும் போது விளையாட்டுக்கு கூடப் பொய் சொல்லக்கூடாது. இன்று விளையாட்டிற்கு சொல்லும் பொய்தான், நாளடைவில் நிஜப் பொய் சொல்லுவதற்கும் வழி வகுக்கும்!'' என்றார் காந்திஜி.

அந்த அறிவுரையை கேட்ட வாலிபன் மனம் வருந்தித் தலை கவிழ்ந்தான்.

காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வசித்தபோது, நகரத்தில் உள்ள ஒரு தெருவின் வழியாக அவர் தினமும் நடந்து செல்வது வழக்கம். அந்த தெருவில் வெள்ளைப் போலீஸ்காரர்கள் ரோந்து சுற்றுவது வழக்கம். அந்தத் தெரு வழியே தினமும் காந்திஜி சென்று வருவது வெள்ளை போலீஸ்காரர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஒரு நாள், அந்தத் தெருவில் ஒரு புதிய வெள்ளைப் போலீஸ்காரர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை ஒரு ஆப்பிரிக்கக் கறுப்பர் என்றே அவர் நினைத்து விட்டார். உடனே அவருக்கு ஆத்திரம் வந்தது.

"வெள்ளைப் போலீஸ் இருக்கும் பகுதிக்குள் ஒரு கறுப்பர் வருவதா?' என்று நினைத்து
ஆத்திரம் கொண்ட அந்த வெள்ளைப் போலீஸ் அதிகாரி, தடதடவென்று ஓடி வந்து பூட்ஸ் கால்களால் காந்திஜியை உதைத்து கீழே தள்ளினார்.

கீழே விழுந்த காந்திஜிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தப் போலீஸ் அதிகாரி தன்னை உதைக்கும் அளவுக்குத்தான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று எண்ணியபடி தடுமாறி எழுந்தார்.

"ஏன் இப்படி செய்தீர்கள்?' என்று அந்தப் போலீஸ் அதிகாரியை அவர் கேட்க நினைத்தபோது—

காந்திஜியின் கிறிஸ்தவ நண்பரான குரோட்ஸ் என்பவர் குறுக்கிட்டார்.

தற்செயலாக அந்தப் பக்கம் வந்த அவர், காந்திஜியை அந்த வெள்ளைப் போலீஸ் உதைத்துக் கீழே தள்ளும் காட்சியைக் கவனித்து விட்டுத்தான் அருகே ஓடி வந்தார்.

""மிஸ்டர் காந்தி! இந்தப் போலீஸ்காரர் ஒரு தவறும் செய்யாத உங்களை உதைத்துக் கீழே தள்ளியதை என் கண்களால் பார்த்தேன். இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருங்கள். நான் வந்து சாட்சி சொல்லுகிறேன்!'' என்றார் நண்பர் குரோட்ஸ்.

அதற்கு காந்திஜி, ""டியர் குரோட்ஸ்! என் சொந்த விஷயங்களுக்காக நான் கோர்ட்டிற்கு போகக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். என்னைப் பற்றி இந்தப் போலீஸ்காரருக்கு எதுவும் தெரியாது. ஆகவே என்னையும் ஒரு கறுப்பர் என்றே நினைத்து தனது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டார். நிறவெறியை இவர்கள் எப்போது நிறுத்துகிறார்களோ அன்றுதான் இவர்களே நிம்மதியுடனும், சந்தோஷமுடனும் இருப்பர்,'' என்று கூறினார்.

அதைக் கேட்ட அந்தப் போலீஸ் அதிகாரி, காந்திஜியின் உன்னதமான குணத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் வெட்கித் தலைகுனிந்தார். அதோடு தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

காந்திஜியும் மன்னித்துவிட்டார்.

யாருக்கு வரும் இந்த உன்னத குணம்?

Tuesday, August 02, 2005

கதை எண் 25 - புதிர்கதை - ஏன் மணக்கவில்லை

Image hosted by Photobucket.com


சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர்.

பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றாள். அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்த போது அவளது பெற்றோர் அவளுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தனர்.

அவர்கள் அதுபற்றி மகளிடம் கூறவே, ""நான் விவாகம் செய்து கொள்வதானால் என்னை எந்த அரசகுமாரன் வாட்போரில் தோற்கடிக்கிறானோ அவனைத் தான் மணப்பேன்,'' என்றாள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும் பல அரசகுமாரர்கள் அவளை மணக்க வந்தனர். அவள் அந்நாட்டு மன்னனின் ஒரே மகளாதலால் அவளை மணந்து கொண்டால் அந்த நாட்டிற்கும் தாம் அரசராகிவிடலாமே என்ற ஆசையில்தான் வந்தனர். மேலும் அவள் பெண்தானே மிக எளிதில் வாட்போரில் அவளைத் தோற்கடித்துவிடலாம் எனவும் நினைத்து விட்டனர்.


வாட்போர் புரிய அவர்கள் களத்தில் இறங்கியபோது தான் பவழாவை வெல்வது எளிதல்ல என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

தினமும் ஒரு அரசகுமாரனுடன் வாட்போர் என அவள் ஏற்பாடு செய்திருந்தாள். அவளுடன் வாட்போர் புரிந்த அரசகுமாரர்கள் எல்லாருமே தோற்றுப் போயினர்.

இந்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சந்தனபுரி இளவரசன் சுவரூபன் மாறுவேடம் பூண்டு வேடிக்கை பார்க்கும் மக்களோடு சேர்ந்து பவழாவின் சுற்றும் முறைகளையும் தாக்குதல்களுக்குக் கையாளும் வழி முறைகளையும் கூர்ந்து கவனிக்கலானான்.

சில சமயங்களில் பவழாவின் அபார வாள்வீச்சைக் கண்டு சபாஷ் என்று கத்தினான். அப்போதெல்லாம் பவழா திரும்பிப் பார்த்து அப்படிக் கத்திய ரசிகன் யார் எனவும் பார்த்தாள்.

பவழாவின் வாட்போர் முறைகளை எல்லாம் நன்கு பார்த்த பிறகு அரசகுமாரனாக அவளுடன் போட்டியிட வந்தான். இருவருக்கும் வாட்போர் நடக்க நாளும் குறிப்பிடப்பட்டது.

போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது. அப்போது தன்னை எதிர்ப்பவன் மிகவும் திறமை மிக்கவன் எனத் தெரிந்து கொண்டாள் பவழா.

அவனைத் தோற்கடிக்கத் தான் அதுவரை பயன்படுத்தாத ஒரு முறையை அவள் கையாள நினைத்த போது, வேறொரு முறையைக் கையாண்டு அவளது வாளைத் தட்டிவிட்டான் சுவரூபன். அது அவளது பிடியிலிருந்து நழுவி சற்று துõரத்தில் போய் விழுந்தது. பவழா தோற்றுப் போனாள்.

அப்போது அவள் அவனை கூர்ந்து கவனித்து, ""நீ இதற்கு முன் நான் மற்ற அரசகுமாரர்களோடு வாட்போர் புரிந்த போது மக்களிடையே மாறுவேடத்தில் பார்வையாளனாக அமர்ந்து வேடிக்கை பார்த்தவன்தானே. அப்போது சில சமயங்கள் சபாஷ் என்று கத்தி எனக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்தவனும் நீதானே,'' என்றாள்.

""ஆமாம்!'' என்றான். அதைக் கேட்டதும் பவழா அவன் வெற்றி பெற்றதன் காரணம் தெரிந்து விட்டது.

""நான் உன்னை மணப்பது முறையல்ல. அதற்குக் காரணம் என்ன என்று நீயே யூகித்துக் கொள்,'' என்றாள்.

""நீ கூறுவது சரியே. நான் உன்னை மணப்பதும் முறையல்லதான்,'' என்று கூறி அவளை அவன் வணங்கிவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிச் சென்று விட்டான்.

தன் மகள் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போயினர் பெற்றோர்.

உங்களுக்கான கேள்வி? ஏன் பவழா அவனை மணக்கவில்லை? காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

Monday, August 01, 2005

கதை எண் 24 - நன்றி மறந்த சிங்கம்

Image hosted by Photobucket.com

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

""மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,'' என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.


அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், ""மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.

""நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.

""மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், ""சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,'' என்றான்.

""என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.

""கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?'' உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,'' என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

""இதனிடம் நியாயம் கேட்போம்,'' என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

""எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.

அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

""நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,'' என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

""நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''

""எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.

""அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,'' என்றது சிங்கம்.

""எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

""நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

""நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,'' என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

குட்டீஸ்... ஒருவர் செய்த நன்றியை மறப்பது மிகப் பெரிய பாவம். அப்படி செய்பவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டார்.