சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, October 01, 2005

கதை எண் 43 - புத்திசாலி கழுதை




ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று புல்மேய்ந்து கொண்டிருந்தது.

கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.

""நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல். எனக்கு பசி அதிகமாக இருக்கிறது,'' என உறுமியது ஓநாய்.

""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீர் என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உமது தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உமது உயிரை வாங்கி விடவும் கூடும். அதற்கு அருள் கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடும். அதற்குப் பிறகு நீர் என்னை அடித்துத் தின்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை,'' என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ""இடது காலில் தான் முள் இருக்கிறது!'' எனக் கூறிற்று.

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்துப் படுகாயப்படுத்தியது.

கழுதையின் உதை தாளமாட்டாது ஓநாய் துடிதுடித்து வீழ்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

7 மறுமொழிகள்:

At 10:52 AM, October 02, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

Its great to see your work here in siruvar poonga. Please continue... your work.

-Senthil Kumar, Pondicherry

 
At 11:13 AM, October 03, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

செந்தில் குமர், சிறுவர் பூங்காவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.

கண்டிப்பாக தொடர்கிறேன்.

 
At 1:13 AM, October 12, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி,
"சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம்" என்பார்கள். கழுதைக்கு தன்னுடைய பின்னங்காலை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்திருக்கிறது. தைரியம் புருஷலட்சனம் என்பார்கள். கழுதை தன்னுடைய புத்திசாலித்தனத்தை தைரியமாக உபயோகிதத்தால் தப்பித்தது.

இது சிறுவர்களுக்கான சிறந்த கதை.


அன்புடன்
கங்கா

 
At 3:19 AM, October 12, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

என்ன கங்கா.. திருமணம் முடிந்ததும் புருஷலட்சணம்னு எல்லாம் பழமொழி சொல்றீங்க :-D

 
At 9:48 AM, October 12, 2005, Blogger Ramya Nageswaran மொழிந்தது...

பரஞ்சோதி, குழந்தைகளுக்கு 'தன்னலமற்ற சேவை' கதையைச் சொன்னேன். பல முறைகள் திரும்ப சொல்லச் சொல்லிக் கேட்டார்கள். இன்று நிறைய புது கதைகள் படித்தேன். இன்னும் 10 நாட்களுக்கு தூங்கப் பண்ணுவது கஷ்டமில்லை!! உங்களுக்கு மிக்க நன்றி.

 
At 5:26 PM, October 12, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

யாத்திரீகன்,
பொருப்பு வந்து விட்டது அல்லவா!!.

அன்புடன்
கங்கா

 
At 4:17 PM, November 14, 2006, Anonymous Anonymous மொழிந்தது...

HI,I am new this blog..nice stories keep continuous rocking...

THanks

Raja

 

Post a Comment

<<=முகப்பு