சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, September 15, 2005

கதை எண் 32 - சிங்கம் - அசிங்கம்

Image hosted by Photobucket.com

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அதனுடைய மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது. அதனால் அது மிகவும் கவலையுடன் காணப்பட்டது. சிங்கத்தி டம் நரி, புலி, கரடி, சிறுத்தை போன்ற மிருகங் கள் வந்து துக்கம் விசாரித்து சென்றன. சிங் கம் முன்போல் காட்டில் அதிகமாக நடமாடாமல் தன்னுடைய உணவிற் காக மட்டும் வெளியே செல்லும். மற்றபடி தன்னுடைய குகையி லேயே இருக்கும். எப் பொழுதும் அது தன்னு டைய மனைவியைப் பற்றியே நினைத்துக் Ù

இப்படியே நாட்கள் பல ஆகிவிட்டன.

சிங்கத்தின் நடமாட்டம் அதிகமாக இல்லாததால் ஒருநாள் புலியும், நரியும் சிங்கத்தை காணச் சென் றன. சிங்கம் மிகவும் சோர்ந்து போய் வேட் டைக்கு கூடச் செல்லாமல் கண்ணீருடன் காணப் பட்டது.

புலியும், நரியும் சிங்கத் திடம், ``இன்னும் அழுது கொண்டிருந்தால் என்ன பயன் அத னால் மனதை திடப்படுத்திக் கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும்'' என்றன.

அதற்கு சிங்கம் என்னு டைய மனைவி இல்லாமல் என்னுடைய பலம் அனைத் தையும் நான் இழந்து விட் டேன். என்னுடைய மனைவி தான் நான் வேட்டைக்குச் செல்லும் போது உற்சாக மும், ஊக்கமும் கொடுத்து வழியனுப்புவாள். அதனால் அவள் இல்லாமல் என்னால் வேட்டைக்கு செல்ல மனமே இல்லை. சாப்பிடவும் பிடிக்க வில்லை என்றது. புலியும், நரியும் சிங்கத்திடம் சிறிது நேரம் பேசி விட்டு குகையை விட்டு வெளியே வந்து தங்க ளுடைய இருப்பிடம் நோக் கிச் சென்றன.

நரி தன்னுடைய இருப் பிடத்திற்கு செல்லும் வழி யில் கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்களைச் சந்தித்தது. நரி அந்த மிரு கங்களிடம் சிங்கம் அது தன்னுடைய முழு பலத்தை யும் இழந்து விட்டது என்று அதன் வாயாலேயே சொன் னது என்றும் வேண்டு மானால் புலியிடம் கேட்டுப் பாருங்கள் என்றது.

புலியும் தற்செயலாக அவ்வழியே வந்தது. கரடி, சிறுத்தை, ஓநாய் ஆகியோர் புலியிடம் நரி சொல்வது உண்மையா என்று கேட்டன. புலியும் அதற்கு ஆமாம் தானும் நரியும் சிங்கத்தை சந்திப்பதற்காக சென்ற போது சிங்கம் அதன் வாயா லேயே தன்னுடைய மனைவி இறந்த பின் தன்னுடைய பலம் அனைத்தையும் இழந்து விட்டதாக சொன் னது என்று புலி மற்ற மிருகங் களிடம் கூறியது.

இதைக் கேட்ட உடன் மற்ற மிருகங்களுக்கு ஆச் சரியம் தாங்க முடியவில்லை. ஏனென்றால் சிங்கத்தின் பலத்தை வைத்து தான் காட்டில் உள்ள மற்ற மிரு கங்கள் அதற்கு பயந்து மரியாதைக் கொடுத்தன. ஆனால் சிங்கமே தன்னு டைய பலம் அனைத்தையும் தான் இழந்து விட்டதாக ஒப்புக் கொண்டதால் தாங் கள் இனி சிங்கத்திற்கு பயப் பட வேண்டாம் என்று புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலான மிருகங்கள் தங்க ளுக்குள் பேசி முடிவெடுத் தன.

நான்கு நாட்கள் கழித்து புலி, கரடி, நரி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் சிங்கம் அதன் குகைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந் தன. அப்பொழுது அவ் வழியே சிங்கம் வந்தது. சிங்கம் அமைதியாக அவ் வழியே அவர்களை கடந்து செல்கையில் புலியும், நரியும் தாங்கள் இனி யாரும் சிங் கத்திற்கு பயப்பட மாட் டோம் என்று அதன் காதில் விழு மாறு சற்று சத்த மாகவே சொன்னார்கள்.

சிங்கம் அதைக் கேட்டு ஒன்றும் சொல்லாமல் அமை தியாக சென்று விட்டது.

புலியும், நரியும் இப்படி சொல்லியும் சிங்கம் அமைதி யாக சென்றதால் சிங்கம் உண்மையிலேயே தன்னு டைய பலத்தை இழந்து விட் டது என்றும் அது பயந்து தான் அமைதியாக செல் கிறது என்றும் தங்களுக் குள் பேசிக் கொண்டன.

சிங்கத்தை அடிக்கடி புலி, நரி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் கேலி செய்து வந்தன. சிங்கமும் அமைதியாக அவர்களின் பேச்சை காதில் வாங்காமல் சென்று விடும்.

ஒருநாள் சிங்கம் வேட் டைக்குச் சென்று ஒரு மானைக் கொன்று அதைத் தன்னுடைய வாயில் கவ்விக் கொண்டு குகையை நோக்கி வந்து கொண்டிருந் தது. சிங்கம் வழக்கம் போல் குகைக்கு செல்லும் வழியில் நரி, புலி, கரடி, சிறுத்தை, ஓநாய் முதலிய மிருகங்கள் நின்று கொண்டிருந்தன.

சிங்கம் தூரத்தில் இருந்தே அவர்களை பார்த்து விட்டபடியால் அமைதியாக நடந்து வந் தது. நரி மற்ற மிருகங்களிடம் தான் சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண் டிருக்கும் மானை பறித்து வருவதாக கூறி சிங்கம் வரும் வழியில் குறுக்கே சென்று நின்றது.

சிங்கமும் நரியின் அருகே வந்து விட்டது.

நரி சிங்கத்திடம் சிங்கத்தின் வாயில் உள்ள மானை தன்னிடம் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி விடு மாறு கூறியது .இல்லாவிட்டால் தான் சிங்கத்தை அடித்தே கொன்று விடுவ தாக மிரட்டியது. சிங்கத்தின் வாயில் கவ்விக் கொண்டிருக்கும் மானை பிடித்து இழுத்தது. சிங்கம் ஏற்கனவே பசியில் வேறு இருந்தது. தான் கஷ்டப் பட்டு வேட்டையாடி விட்டு தனக்காக கொண்டு வரும் இரையை மற்றொரு வர் அபகரிக்க நினைப்பதால் அது இவ்வளவு நாட்கள் காத்த தன்னு டைய பொறுமையை இழந்து விட்டது. கவ்வியிருந்த மானை கீழே வைத்து விட்டு மிகக் கடுமையான கோபத்து டன் நரியை பிடித்து இழுத்து அதை இரண்டே அடியில் அதனுடைய உடலை இரண்டாக கிழித்து எறிந்து விட்டது.

Image hosted by Photobucket.com
இவற்றை எல்லாம் மரத்தடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த புலி, ஓநாய், கரடி, சிறுத்தை ஆகியோர் அங்கிருந்து நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்து விட்டனர்.

சிங்கம் மானை தன்னுடைய வாயில் கவ்வி தன்னுடைய குகையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றது. சிங்கம் சொன்னதை தவறாக எடுத் துக் கொண்ட நரி சிங்கத்திடம் வாலாட்டி தன்னுடைய முடிவை தானே தேடிக் கொண்டது. நரிக்கும் மற்ற மிருகங்களுக்கும் தெரியாமல் போய் விட்டது, சிங்கத்தின் வீரமும் பலமும் எப்பொழுதும் அதை விட்டுப் போகாதென்று.

4 மறுமொழிகள்:

At 10:14 AM, September 15, 2005, Blogger NambikkaiRAMA மொழிந்தது...

உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. இன்னும் சில மாதங்களுக்குப்பின் நீங்கள் வழங்கி வரும் கதைகள் எனக்கு நிறையவே தேவைப்படும். நன்றி!

 
At 2:06 PM, September 16, 2005, Blogger lisaalexander75062186 மொழிந்தது...

i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here

 
At 4:33 AM, September 17, 2005, Blogger Unknown மொழிந்தது...

பரஞ்சோதி நல்ல கதை.
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

பாசிட்டிவ்ராமா,
என்ன அப்பாவாகப் போகிறீகளா? அல்லது குழந்தைகள் கதை கேட்கும் வயசை அடைந்து விட்டார்களா?
எப்படியோ வாழ்த்துகள்

 
At 8:33 AM, September 17, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

பலூன் மாமா மிகச் சரியாக சொன்னீங்க.

சகோதரர் விரைவில் அப்பா ஆக இருக்கிறார், இப்போவே தினமும் கதை சொல்ல சொல்லியிருக்கிறேன்.

அபிமன்யூ கருவிலேயே கதை கேட்ட மாதிரி, என் மகள் வயிற்றில் இருக்கும் போதே ஜான்ஸி ராணி, கிரண் பேடி போன்ற சாதனைப் பெண்மணிகளைப் பற்றிய புத்தகங்களை என் மனைவி படித்தார். அதற்கு ஏற்ப இப்போவே என் மகள் இருக்கிறார்.

அவரது அம்மா கண்டு பயப்படும் கரப்பான் பூச்சியை பயப்பட்டாமல் கையில் பிடிக்கிறாரே ))))

 

Post a Comment

<<=முகப்பு