கதை எண் 84 - கோ.இராகவனா, கொக்கா?
கோ.இராகவன் யார் என்று சின்னப்பிள்ளையை அந்த ஊரில் கேட்டால் தெரியும், அப்பா அம்மா வைத்த பெரிய என்னவோ இராகவன், ஆனால் ஊரால் சூட்டிய பெயர் கோ.இராகவன்.
இராகவன், சின்ன வயசிலேயே அதிபுத்திச்சாலி, அதிபக்திமான், அதிவாயாடி, எப்போ பார்த்தாலும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது, சுண்டல், சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது தான் அதிகம் செய்வார். கோயிலில் அமர்ந்து ஆன்மீகத்தைப் பற்றி பேசியதால் அவரை எல்லோரும் கோயில் இராகவன் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமலும் சுருக்கமாக கோ.இராகவன் என்று அழைக்கலாம்.
கோ.இராகவன் நன்றாக படித்து பட்டங்கள் பெற்றப் பின்பு வேலைக்கு போக முயற்சி செய்தார். அப்பா அம்மாவோ நம்மிடம் எக்கசக்கமான சொத்துகள் இருக்கிறதே, அவற்றை நிர்வாகம் செய்தாலே போதுமே என்றார்கள். இராகவனுக்கோ உலக ஞானத்தை பெறவும், மக்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள், சிக்கலான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது போன்றவற்றை கற்றுக் கொள்ள சில ஆண்டுகள் யாரிடமாவது தொழிலாளியாக வேலை செய்யலாம் என்று முடிவு செய்து, அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி பக்கத்து நாட்டுக்கு சென்றார்.
கால் பொன போக்கில் நடந்து போனவரிடம் இருந்த காசு எல்லாம் தீர்ந்து விட்டது, அங்கே கோயிலுக்கு போனால் ஏதாவது பிரசாதம் கிடைக்கும், சாப்பிட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அங்கே போனால், கோயிலில் பெரிய பூட்டு போட்டிருந்தது, அருகில் போன ஒருவரை விசாரித்த போது, இக்கோயிலானது பரம்பரை பரம்பரையாக அந்த ஊர் ஜமிந்தார் குடும்பத்தால் பராமரிக்கப்பட்டதாகவும், தற்போது இருக்கும் ஜமிந்தார் கடுமையான கஞ்சபேர்வழி, கொடிய மனசு படைத்தவர், கோயிலுக்கு என்று அவர் முன்னோர் கொடுத்த விளை நிலங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டதாகவும், கோயில் நகைகள் அனைத்தையும் விற்று பணமாக்கி விட்டதாகவும், அத்தோடு கோயிலையும் இழுத்து மூடியதாக சொன்னார்.
அதைக் கேட்ட இராகவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, அதுக்கு மேலே பசி வேற, என்ன செய்யலாம் என்று யோசித்து நேராக ஜமிந்தார் வீட்டுக்கு போனார், போய் “அய்யா! எனக்கு வேலை போட்டு போடுங்க, என்ன வேலை என்றாலும் செய்வேன்”
“நீ யாரப்பா, உனக்கு என்ன வேலை தெரியும்?”
“தோட்டவேலை, கால்நடைகளை பராமரிக்கிறது எல்லாமே செய்வேன்”
“சரி, வேலையில் சேர்ந்துக் கொள், முதலில் நன்றாக சாப்பிடு” என்று கூறிவிட்டு, பெரிய விருந்தே கொடுத்தார். தினமும் சைவம், அசைவம் என்று விதம்விதமாக சாப்பாடு போட்டார், சாப்பாட்டை சாப்பிட்டு ஜமிந்தார் மீது கோ.இராகவனுக்கு தனி பக்தியே வந்து விட்டது, அன்று ஜமிந்தாரைப் பற்றி அந்த ஊர்க்காரர் தப்பு தப்பாக சொல்லிட்டார், ஜமிந்தார் தங்கமான மனுசர் என்று இராகவன் நம்பினார்.
இராகவனுக்கு வேலையே கொடுக்கவில்லை, ஒரு மாசம் உட்கார வைத்து சாப்பாடு போட்டதால், உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே கஷ்டப்படும் அளவுக்கு கொழு கொழு என்று குண்டானார்.
நம்ம ஜமிந்தாரைப் போல் உலகில் நல்லவர்கள் யாருமே இருக்கமாட்டாங்க என்ற நிலைக்கு வந்து விட்டார். ஒரு நாள் இரவில் ஜமிந்தார் கோ.இராகவனைப் பார்த்து “தம்பி, நாளை காலையில் நாம் நீண்ட தூரப் பயணம் செல்ல இருக்கிறோம், நேற்று கொன்று எருமைமாட்டின் தோலை எடுத்து மூட்டையாக கட்டிவை, போகும் போது எடுத்துட்டு போக வேண்டும்” என்றார்.
இராகவனும் தோலும் கொஞ்சம் சதையுமாக இருந்த எருமை மாட்டின் தோலை எடுத்து சுருட்டிக் கட்டினார். அடுத்த நாள் ஜமிந்தார் ஒரு குதிரையில் ஏறினார், அடுத்த குதிரையில் இராகவனும், மற்றொரு குதிரையில் பெரிய பெரிய சாக்கு மூட்டைகளும், எருமை மாட்டின் தோலும் கட்டியிருந்தார்கள்.
இரவும் பகலும் மாறி மாறி ஒரு வாரம் நெடுந்தூரப் பயணம் சென்றார்கள். போகிற வழியில் வானம் அடிக்கடி இருண்டது போல் பெரிய பெரிய பறவைகள் பறப்பதை இராகவன் கண்டார்.
இவ்வாறாக ஒருவார பயணத்தின் முடிவில் ஒரு பெரிய மலையடிவாரத்தை அடைந்தார்கள், சுற்றிலும் வெட்டவெளியாக இருந்தது. இராகவனும் ஜமிந்தாரும் இரவு உணவை முடித்து உறங்கினார்கள், விடியற்காலையில் ஜமிந்தார் இராகவனை எழுப்பி, “தம்பி! நீ அந்த எருமை மாட்டின் தோலை எடுத்து பாய் போல் விரி, பின்னர் அதில் படுத்துக் கொள்” என்றார்.
இராகவனும் ஜமிந்தார் சொல்கிறாரே என்ற பயபக்தியில் ஏன் எதுக்கு என்று கூட கேட்காமல் எருமை மாட்டின் தோலை விரித்து படுத்தார். உடனே ஜமிந்தார் பெரிய கயிறு போட்டு இராகவனை மாட்டுத்தோலுக்குள் வைத்து கட்டிவிட்டார், தன் குதிரைகளை ஓட்டிக் கொண்டு, அருகில் இருந்த காட்டுக்குள் மறைந்து விட்டார். சிறிது நேரத்தில் பெரிய பெரிய இராட்சத பறவைகள் பறந்து வந்தது, எருமை மாட்டின் தோலுக்குள் சுருண்டு இருந்த இராகவனை அப்படியே தூக்கிக் கொண்டு மலையின் உச்சிக்கு கொண்டு சென்றது. அங்கே சென்றதும், மாட்டுத்தோலை தங்கள் இராட்சச அலகுகளால் கொத்த, இராகவனுக்கு பயம் வந்து விட்டது, ஜமிந்தார் தன்னை பறவைகளுக்கு பலி கொடுத்து விட்டாரே என்று அலறி துடித்து வெளியேறத்தொடங்கினார். அதே நேரம் கீழே ஜமிந்தார் பெரிய வெடியை வெடிக்க வைக்க, பறவைகள் பயந்து பறந்தோடி விட்டது, அதே நேரத்தில் இராகவனும் வெளியே வந்து விட்டார்.
“அய்யா, ஜமிந்தாரே, என்னை காப்பாற்றுங்க, உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்”.
“கவலைப்படாதே தம்பி, நான் உன்னை காப்பாற்றுகிறேன், நீ உடனே அங்கே குவிந்து கிடக்கும் பெரிய பெரிய இரத்தினம், மரகத, வைர கற்களை எடுத்து கீழே வீசு, வேகமாக செய், இல்லை என்றால் பறவைகள் மீண்டும் வந்து விடும்” என்றார்.
இராகவனும் அங்கே இங்கே என்று ஓடி கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி கீழே வீசினார், அங்கே எல்லா இடங்களிலும் மனித எலும்புத்துண்டுகள் கிடந்தன, அதை பார்த்ததும் அவருக்கு பயம் வேறு தொத்திக் கொண்டது. ஜமிந்தாரும் தான் கொண்டு வந்த அத்தனை மூட்டைகளையும் நிரப்பிக் கொண்டு குதிரையில் கிளம்பத் தொடங்கினார்.
அதை பார்த்து பயந்து அலறிய இராகவன் “அய்யா, என்னை காப்பாற்றுங்க, இல்லை என்றால் பறவைகள் என்னை கொன்றுவிடும்”
“தம்பி, உன்னை பலி கொடுத்தால் தான், அடுத்த முறையும் மனித இறைச்சிக்காக பறவைகள் இங்கே வரும், மேலும் நான் என்ன செய்கிறேன் என்ற உண்மை உனக்கு தெரிந்து விட்டது, ஏற்கனவே உண்மை தெரிந்தவர்களின் கதியை மேலே நீ பார்க்கிறாயே, அதே தான் உனக்கும்” என்று கூறி இடத்தை காலி செய்தார்.
இராகவனுக்கோ வயித்தை கலக்கியது, பெரியபறவைகளுக்கு இன்று சரியான விருந்து தான், இனியும் தாமதித்தால் தன் கதி அதோ கதி தான், என்று யோசித்து, அங்கே கிடந்த எலும்புக்கூடுகளை எல்லாம் ஒன்றாக குவித்து, அதன் அடியில் போய் ஒளிந்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் வந்த பறவைகள் எருமை மாட்டின் தோலை மட்டும் கொத்தி சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து தூங்கத் தொடங்கின, கொஞ்ச நேரத்தில் எலும்புக்கூடுகளின் அடியிலிருந்து வெளியேறி, அங்கே கிடந்த பறவைகளின் இறகுகளால் தன் உடலை சுற்றிக் கட்டிக் கொண்டார், அப்புறமா பெரிய பறவையில் ஒன்றின் காலில் தன்னைக் கட்டிக் கொண்டார்.
விடியற்காலையில் மீண்டும் பறவைகள் இரைத் தேட போனது, வெகுதூரம் பறந்த போது தூரத்தில் ஒருகிராமம் வருவதை அறிந்த கீழே பெரிய ஆறு ஓடுவதை அறிந்து தன்னை பறவையில் காலில் இருந்து விடுவித்துக் கொண்டார். பறவையில் இறகுகளுடன் தண்ணீரில் விழுந்தார், இறகுகள் இருந்ததால் மிதந்து கொண்டே அக்கிராமத்தை அடைந்தார்.
தன் பையில் இருந்த மரகத கற்களை அங்கே விற்று, புதிய உடைகள் வாங்கினார். தன்னுடைய சாப்பாட்டை பாதியாக குறைத்துக் கொண்டார், தாடி, மீசை எல்லாம் வைத்துக் கொண்டார், சில நாட்களில் உடல் மெலிந்து அடையாளமே தெரியவில்லை, நேராக அந்த ஜமிந்தாரின் வீட்டிக்கு போய் வேலை கேட்டார்.
இராகவனை அடையாளம் தெரியாத ஜமிந்தாரும் மிக்க மகிழ்ச்சி கொண்டு, வழக்கம் போல் நல்ல சாப்பாடு கொடுத்தார், ஒரு வாரத்திலேயே மாட்டுத்தோலுடன் மலையடிவாரம் என்றார்.
வழக்கம் போல் இராகவனை மாட்டுத்தோலை விரித்து படுக்கச் சொன்னார், உடனே இராகவன் “அய்யா, மாட்டுத்தோலில் எப்படி படுப்பது என்று எனக்கு தெரியலையே, நீங்க படுத்து காட்டுங்க” என்றார்.
உடனே ஜமிந்தாரும் இப்படி தான் படுக்க வேண்டும் என்று காட்ட, அதிரடியாக செயல்பட்ட இராகவன், ஜமிந்தரை மாட்டுத்தோலுக்குள் வைத்துக் கட்டினார், ஜமிந்தாரும் “டேய், டேய் என்ன செய்கிறாய், என்னை அவிழ்த்து விடு, இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன்” என்றார்.
இராகவன் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் காட்டுக்குள் ஓடி மறைந்தார், சிறிது நேரத்தில் அங்கே வந்த பறவைகள் மாட்டுத்தோலுடன் ஜமிந்தாரை தூக்கிக் கொண்டு மலை உச்சியை அடைந்தது, சிறிது நேரத்தில் இராகவன் தன்னிடம் இருந்த வெடியை வெடிக்க வைக்க பறவைகள் ஓடி விட்டன, ஜமிந்தாரும் ஒருவழியாக மாட்டுத்தோலிலிருந்து வெளியேறி “டேய், யாருடா நீ, எப்படி என் ரகசியம் உனக்கு தெரிந்தது” என்றார்.
தான் இராகவன் என்றும், சென்ற முறை தான் தப்பியதை சொன்னார், அத்துடன் அங்கே கிடக்கும் அனைத்து கற்களையும் கீழே எறியச் சொன்னார்., அவ்வாறு செய்தால் தப்பிக்கும் வழி சொல்வதாக சொன்னார்.
ஜமிந்தாரும் தன் குண்டு உடம்பை தூக்கி கொண்டு அங்கே இங்கே என்று ஓடி அனைத்தும் தூக்கி விசினார், இராகவனும் அவற்றை எல்லாம் மூட்டைகளாக கட்டுக் கொண்டு நடையை கட்டினார்.
ஜமிந்தாரும் இராகவன் தப்பித்த வழியை சொல்லித் தரச் சொல்லி கெஞ்சினார். உடனே இராகவன் “அய்யா, எனக்கு உங்க முன்னாள் வேலையாட்கள் தான் உதவினார்கள், அவர்களிடமே கேளுங்க” என்றார்.
இராகவனும் வேகவேகமாக மூன்று குதிரைகளின் மூட்டைகளை கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.
ஜமிந்தாரும் ஓடி போய் குவியலாக கிடந்த எலும்புக்கூட்டின் அடியில் ஒளிந்துக்கொள்ள பார்த்தார், ஆனால் அவரது பெரிய உருவத்தை அவற்றால் மறைக்க முடியவில்லை, அங்கே வந்த பறவைகள், கொடிய ஜமிந்தாரை கொன்று தின்றன.
ஜமிந்தாரின் ஊருக்கு போன இராகவன் ஜமிந்தாருக்கு நேர்ந்ததை எல்லோரிடமும் சொல்லி, தான் கொண்டு வந்த இரத்தின கற்களில் பாதியை விற்று கோயிலை பராமரிக்கவும், ஜமிந்தாரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தாருகும் கொடுத்து விட்டு, மீதியை தன் வீட்டிக்கு கொண்டு வந்து, விற்று பெரும் பணக்காரராக, எல்லோருக்கும் உதவுகிறார், இப்போவும் கோயிலுக்கு போய் சுண்டல், சர்க்கரை பொங்கல் வாங்கி சாப்பிட்டு வருகிறார், நம்ம கோ.இராகவன்.
38 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
ஹாஹாஹா... சூப்பர் சங்கிலித்தொடர் யோசனை...... கலக்கிட்டீங்க பரஞ்சோதி... அதேநேரத்துல பயங்கர நக்கல் ;-) , கதை சுவாரசியமா இருந்துச்சுங்க...
அடிக்கடி வலைப்பூவில் எழுதுகிறாரே அதை விட்டுவிட்டீர்களே பரஞ்சோதி
அடடா, கதைகள்ல கூட ரீமிக்ஸ் வந்தாச்சா ? நன்றாகவே இருக்கிறது.
ஆகா! கோ.இராகவனா......ஆண்டவா...இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை...ஆனாலும் கதை நல்லா இருந்தது.
அது சரி. கோயில் இராகவனும் கோயில் பெருச்சாளியும் ஒன்னா? :-)))
// அடிக்கடி வலைப்பூவில் எழுதுகிறாரே அதை விட்டுவிட்டீர்களே பரஞ்சோதி //
நல்லா எடுத்துக் கொடுக்குறீங்க முத்து.....
ராகவன்கிட்ட அந்தக் கற்கள் இன்னும் ஸ்டாக் இருக்கா...இல்ல, எல்லாத்தையும் வித்துட்டாரா? பெங்களூரு பக்கம் போக வேண்டியிருக்கு..அதான் கேட்டேன். :-)
ஆகா, எங்க தலைவரை பத்தி இப்படி ஒரு சூப்பர் கதை போட்டு இருக்கீங்களே. சபாஷ்.
//இராகவன், சின்ன வயசிலேயே அதிபுத்திச்சாலி, அதிபக்திமான், அதிவாயாடி, எப்போ பார்த்தாலும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது, சுண்டல், சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது தான் அதிகம் செய்வார்.//
எல்லாம் சரி. ஆனா இப்படி அதிவாயாடின்னு சொல்லிட்டீங்களே. நம்மாளைப் பார்த்தா அப்படி தெரியலையே. :(
கோ.ராகவன்... விளக்கம் அருமை :-))
ரத்தின கற்கள் இன்னும் இருக்கா....
வாருங்கள் இன்னும் ஒரு முறை அங்கு போ வரலாம்...
பரம்ஸ்.... நல்ல கதை...
கோ.ராகவன்... விளக்கம் அருமை :-))
ரத்தின கற்கள் இன்னும் இருக்கா....
வாருங்கள் இன்னும் ஒரு முறை அங்கு போ வரலாம்...
பரம்ஸ்.... நல்ல கதை...
நல்ல கதை!
கடந்த மூன்று கதைகளாக ரொம்ப சுவாரஸ்யமாகவே கொண்டு போறீங்க பரஞ்சோதி. தொடருங்கள். ராகவன பற்றி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்க போல :-)))).
வாங்க யாத்திரீகன்,
மிக்க நன்றி.
விரைவில் யாத்திரீகனின் வீர சாகசப்பயணங்கள் என்ற தொடரையும் சொல்லிட வேண்டியது தான்.
வாங்க முத்து,
எப்படி இருக்கீங்க, கூகிள் சாட்டில் இருந்தால் வாங்களேன்.
இராகவன், வலைப்பூ மட்டுமல்லாது கோயில் சுண்டல்களை விதவிதமாக எப்படி செய்வது என்ற ஆராய்ச்சியிலும் அதிக ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல நினைக்கிறேன் :)
வாங்க மணியன் சார்,
நான் முன்பே வேறு தளங்களில் என் நண்பர்களை கதாபாத்திரங்களாக அமைத்து சில கதைகள் எழுதியிருக்கிறேன்.
உங்களுக்கும் ஒரு சாகசக்கதை தயார் செய்யட்டுமா?
வாங்க இராகவன் அண்ணா,
கோயில் இராகவன் பிரசாதத்தை கேட்டு வாங்கி சாப்பிடுவார்.
கோயில் பெருச்சாளி பிரசாதத்தை கேட்காமல் எடுத்து சாப்பிடும், ஆக மொத்தம் வித்தியாசம் இருக்குது.
வாங்க தருமி அண்ணா,
உங்க வருகை மகிழ்ச்சி கொடுக்கிறது.
பெங்களூர் போனால் இராகவன் அண்ணா செங்கல்லை தான் கொடுப்பார்.
நானும் கேட்டுப் பார்த்துட்டேன், ஊகூம் ஜமிந்தாரை விட மோசமாக இருக்கிறார்:)
வாங்க இலவசக்கொத்தனார்,
இராகவன் அண்ணா உங்க தலைவரா?
அடுத்த முறை மலைக்கு அழைத்து போகச் சொல்லுங்க.
அப்புறம் இராகவன் அண்ணா வாயாடி இல்லையா, பாவன் நீங்க, உங்களை நல்லா ஏமாத்துறார்.
வாங்க பென்ஸ்,
எப்படி இருக்கீங்க. வலைப்பூவிலும் கலக்குங்க.
இந்த கதையோட நீதி என்ன பரஞ்சோதி?
கோ.இராகவன மாதிரி புத்திசாலியா இருக்கணும்னா?
அது எல்லாரலயும் முடியுங்களா?
தருமி அண்ணா. அதான் கோ.ராகவனா கொக்கான்னு தலைப்புலயே சொல்லியாச்சே.. அப்புறம் என்ன..
கல்லையெல்லாம் அப்பவே பத்திரப்படுத்தியிருப்பாரு..
பரஞ்சோதி,
உங்க கூகிள் ஐடி என்ன?.
வாங்க ஜோசப் அண்ணா,
இராகவன் அண்ணா பெயர் போட்ட புண்ணியத்தால் பெரியவங்கள் எல்லோரும் வருகை தந்திருக்கீங்க, மிக்க நன்றி.
நானே இரண்டு கல் கேட்கலாமா என்று யோசிக்கிறேன், ஊருக்கு வரும் போது பெங்-கல்-ளூர் தான் முதலிடம் போக வேண்டும்.
முத்து அவர்களே என்னுடைய ஐடி.
paransothi@gmail.com
வாங்க நிறைய பேசலாம்.
நண்பர் மதி அவர்களை சிறுவர் பூங்காவில் வரவேற்கிறேன், தொடர்ந்து படித்து கருத்துகள் கூறவும்.
சகோதரி ஆர்த்தி அவர்களை சிறுவர் பூங்காவில் வரவேற்கிறேன்.
தொடர்ந்து படித்து கருத்துகள் கூறுங்கள்.
அன்பு நண்பர் தாமரைச்செல்வன்,
வருக வருக, எப்படி இருக்கீங்க. பின்னோட்டம் போட பிந்தியதற்கு மன்னிக்கவும். தொடர்ந்து படித்து கருத்துகள் கூறுங்கள்.
// பெங்களூர் போனால் இராகவன் அண்ணா செங்கல்லை தான் கொடுப்பார்.
நானும் கேட்டுப் பார்த்துட்டேன், ஊகூம் ஜமிந்தாரை விட மோசமாக இருக்கிறார்:) //
என்னப்பா பரஞ்சோதி...புன்னகைல தெரியிர பல்லைப் பத்திப் பேச வென்டிய ஆள் கிட்ட பொன்னகைல வைக்கிற கல்லைப் பத்திப் பேசுனா...எப்படி? என் கழுத்துல கூட ஒரே ஒரு சின்ன மாலை தான் இருக்கு. அதுவும் சின்னச் சின்ன மர உருண்டைகளைக் கோர்த்துச் செய்தது....நீ என்னன்னா பளபளக்கும் மணி உருண்டைகளைக் கேக்குறையே
பரஞ்சோதி. நல்லா கதை சொல்றீங்க. நம்ம கோ.இராகவனுக்கும் உங்க கதையில வர்ற கோயில் இராகவனுக்கும் எத்தனைப் பொருத்தம்? :-)
அடுத்த கதையில எந்த நண்பர் கதாநாயகன்?
வாங்க குமரன்,
பதில் சொல்ல அதிக நாட்களாகிவிட்டது.
இதுவரை மூன்று நண்பர்களை சொல்லியாச்சு, இனியும் மூன்று பேர் இருக்காங்க, அதில் மூன்றாவது நபரை கதாநாயகனாக்கி விடலாம் என்று நினைக்கிறேன்.
ஹா...ஹா...நல்ல கதை பரஞ்சோதி சார். இன்னிக்கு தான் படிச்சேன். ராமநாதன் பேரைப் பாத்து இங்கு வந்தேன். பாத்தா ராகவனும் குமரனும் ஏற்கனவே ஹீரோவா இருக்காங்க.
சார்,
ராமநாதன் கதைக்கு பின்னூட்டமிட முடியவில்லை. சற்று கவனிக்கவும்.
வாங்க கைப்புள்ள,
ஏனென்று தெரியலை, அப்பதிவே காணவில்லை, மீண்டும் பதிவை பதிந்துள்ளேன், அப்பவும் ஏதோ தவறு காட்டுகிறது. புதிய பதிவு இருந்தால் அதில் கருத்து கூற முடிகிறதா என்று பாருங்கள்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மீண்டும் முயற்சித்தேன். இராமநாதன் கதை தெரிகிறது எனினும் பின்னூட்டம் இட முடியவில்லை. ப்ளாக்கர் பிரச்னை என்று நினைக்கிறேன். ப்ளாக்கருக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள்.
good one. ippothuthan padikkum vaippu kidaithathu.
கோ. ராகவன் என்ரதும் நம்ம பெங்களூர் ராகவன் போலன்னு நினைத்தேன்(கோயில் ராகவனா) கதை ரொம்ப நல்லா இருந்தது!
It is good to bring nice stories like this to children. But please always add source.
This is a russian story from "Mountain of Gems" story book.
நட்சத்திர ஸ்ருசல் அவர்களே!
வருக வருக, உங்க கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து படித்து கருத்துகள் கூறவும்.
வாங்க தாணு அக்கா,
அப்போ கதையின் பெயரை பெ.கோ.இராகவன் என்று வைத்திருக்க வேண்டும்.
// It is good to bring nice stories like this to children. But please always add source.
This is a russian story from "Mountain of Gems" story book. //
நன்றி நண்பரே!
உங்க பெயரை சொல்லியிருக்கலாமே.
நீங்க சொல்வது உண்மை தான், கதை எங்கிருந்து வந்தது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும், ஆனா பாருங்க நான் கதைகள் பல வருடங்களாக சேகரித்து வருகிறேன், மேலும் இணையத்தில் கிடைப்பதை வோர்டில் காப்பி செய்து சேமித்து வருவதால் எங்கிருந்து எடுத்தேன் என்பது நிறைய கதைகளுக்கு சொல்ல முடிவதில்லை.
மேலும் இக்கதை நான் தமிழிலில் படித்த நினைவு, இதே போன்று சிந்துபாத் பயணங்களில் கூட ஒரு கதை வரும்.
இனிவரும் காலங்களில் முடிந்தவரை நீங்க சொன்னதை கடைபிடிக்க பார்க்கிறேன். அடிக்கடி வாருங்கள்.
Post a Comment
<<=à®®à¯à®à®ªà¯à®ªà¯