கதை எண் 45 - பீர்பாலின் புத்திசாலித்தனம் (2)
பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்துச்சு. பக்கத்து ஊரு ராஜாவுக்கு ரொம்ப பொறாமை.. இப்படி ஒரு ஆள் நம்ம தேசத்துல இல்லயேன்ணு..எப்படியாவது இந்த பீர்பாலை அவமானப்படுத்தணுனு யோசிச்சிட்டிருந்தான்.ஒரு யோசனை தோணுச்சு.. உடனே தன்னோட நாட்டில இருக்கும் அனைத்து வகை அபூர்வ ரோஜா செடிகளையும் அக்பருக்கு பரிசா அனுப்பினார்.கூடவே ஒரு வேண்டுகோலும் விடுத்தார். என்ன தெரியுமா.."
பிரியமான ராஜாவே இதோ என்னோட சிறிய பரிசுகளை ஏத்துக்கங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருக்கு. உங்க ஊரு முட்டை கோஸ் சுவை ரொம்ப அருமையா இருக்குமாமே எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க. கூடவே உங்க பீர்பாலையும் அனுப்புங்க.. அப்படி ஒரு புத்திசாலி எங்க நாட்டுக்கு வரணும்னு நாங்க ஆசைப்படுறோம்"இப்படி ஒரு கடிதமும் அனுப்பினார்.
அக்பருக்கு ஒரே தர்ம சங்கடமாப் போச்சு. முட்டை கோஸ் அவங்க ஊருக்கு போய் சேரதுக்குள்ள அழுகிடுமே. என்ன செய்யறதுனு யோசிச்சார்.
உடனே பீர்பால் வந்தார். நான் கொண்டு போறேன் அரசே. எனக்கு ஒரு 10 மாட்டு வண்டி மட்டும் கொடுங்க அப்படின்னார்.
அக்பரும் பீர்பால் கேட்டதெல்லாம் கொடுத்தார். பீர்பால் பயணத்தை தொடங்கினார்.
சில காலம் கழிச்சு அந்த ராஜாவோட அரண்மனைக்கு போனாரு பீர்பால். 'ராஜா நீங்க கேட்ட பரிசில் கொண்டு வந்திருக்கேன் ஆனா நீங்க கொஞ்சம் அரண்மனைக்கு வெளிய வரணும்னு' சொன்னாரு நம்ம பீர்பால்.
ராஜாவுக்கு ஒரே சந்தோஷம்.. எப்படியும் முட்டை கோஸெல்லாம் அழுகி போயிருக்கும்.. பீர்பால் அவமானப்படப்போரார்னு நெனச்சிக்கிடே வெளிய வந்தார்..வந்தவர் அசந்து போயிட்டாரு..
பின்ன பீர்பால் என்ன பன்னார் கெரியுமா.. அந்த மாட்டு வண்டியிலவே முட்டை கோஸ் விதைச்சு எடுத்து வந்துட்டார்.அது இந்த தேசத்துக்கு வரதுக்குள்ள நல்லா விளைஞ்சு சமைக்க தயாரா இருந்தது.
அந்த ராஜா நம்ம பீர்பால் கிட்ட மன்னிப்பு கேட்டு அவருக்கு நிறைய பரிசில் கொடுத்து அனுப்பினார்.
(இந்த கதையை சிறுவர் பூங்காவில் மற்றோரு பதிவில் கருத்தாக சகோதரி கீதா சொல்லியிருந்தார்கள், குழந்தைகளா! எல்லோரும் கீதா அக்காவுக்கு நன்றி சொல்லுங்க)
5 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
பரஞ்சோதி,
"வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்" என்பார்கள், அது போல பீர்பாலின் புத்திச்சாலித்தனம் புலப்பட்ட கதைகளில் இதுவும் ஒன்றாகும். "நெஞ்சிலே நஞ்சும், உதட்டிலே தேனும்" வைத்துக் கொண்டு காரியமாற்றிய அரசனுக்கு நன்றாக கரியையும் பூசி தன்னுடைய சாமர்த்தியத்தையும் காட்டி விட்டார் பீர்பால்.
கங்கா உங்க கருத்தும் அதனுடனான பழமொழியும் அருமை.
முதன் முறையாக இந்த பழமொழியை அறிகிறேன். நன்றி.
பீர்பாலின் சாகசங்கள் தொடரும்.
பரஞ்சோதி,
ஒவ்வொரு முறையும் புதிதாக எந்தப் பழமொழியினைப் படித்தாலும் அதனை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பேன். எனது பாட்டியும், ஏன் என் அம்மாக்கூட வழக்குத் தொடராக நாம் படித்து ஏட்டில் அறியாத பல பழமொழியினை அநாசியமாக உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன்.
முக்காலத்திற்கும் பொருந்தும் பழமொழிகளை அனைவரும் அறிந்து அதனை தகுந்த விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களது பகுதியில் பழமொழியுடன் எனது கருத்தினை தெரிவிக்கிறேன்.
பரஞ்சோதி,
தொடர்ந்து கதை பதியுங்கோ... பின்னூட்டாமல் விட்டாலும் அவ்வப்போது படித்துவருகிறேன். உங்கள் பதிவுதான் அவ்வப்போது மகளுக்கு கதை சொல்ல உதவுது!
வாங்க, வாங்க அன்பு,
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
உங்கள் மகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். சாதனை படைக்கும் பெண்மணி வருவார், இறைவன் அருள் புரிவார்.
Post a Comment
<<=à®®à¯à®à®ªà¯à®ªà¯